எசேக்கியேல் 42:13

அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும் தென்புறமான அறைவீடுகளும் பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது.

சூழலுடன் வாசிக்கவும் · எசேக்கியேல் 42

11அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும் எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.

12தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.

13அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும் தென்புறமான அறைவீடுகளும் பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது.

14ஆசாரியர் உட்பிரவேசிக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்குமுன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றி வைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலே போவார்கள் என்றார்.

15அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.

எசேக்கியேல் 42 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी