பெரியோரின் சத்தம் அடங்கி அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
8வாலிபர் என்னைக்கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
10பெரியோரின் சத்தம் அடங்கி அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
12முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்