என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
1யோபே, என் நியாயங்களைக்கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
2இதோ, என் வாயை இப்போது திறந்தேன், என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
5உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்