லேவியராகமம் 8:4

கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே செய்தான்: சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,

சூழலுடன் வாசிக்கவும் · லேவியராகமம் 8

2நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து,

3சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.

4கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே செய்தான்: சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,

5மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,

6கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,

லேவியராகமம் 8 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी