பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
21அப்பொழுது ராஜா யோவாபைப்பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
22அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
23பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
24ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான், அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
25இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை, உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்