என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
18நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
19என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
20மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.
21குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்