எசேக்கியேல் 44:21

ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

சூழலுடன் வாசிக்கவும் · எசேக்கியேல் 44

19அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.

20அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.

21ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

22விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியனின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.

23அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.

எசேக்கியேல் 44 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी