எசேக்கியேல் 47:18

கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.

சூழலுடன் வாசிக்கவும் · எசேக்கியேல் 47

16ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.

17அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார்ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடபுறம்.

18கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.

19தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.

20மேற்புறம் அந்த எல்லைதுவக்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேருமட்டும் இருக்கிற பெரிய சமுத்திரமே; இது மேற்புறம்.

எசேக்கியேல் 47 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी