லேவியராகமம் 14:49

அப்பொழுது வீட்டிற்குத் தோஷம் கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து,

சூழலுடன் வாசிக்கவும் · லேவியராகமம் 14

47அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்.

48ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.

49அப்பொழுது வீட்டிற்குத் தோஷம் கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து,

50ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,

51கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,

லேவியராகமம் 14 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी