எசேக்கியேல் 27:23

ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும் அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

சூழலுடன் வாசிக்கவும் · எசேக்கியேல் 27

21அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையான வர்த்தகராகி ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

22சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னோடே வர்த்தகம்பண்ணி, மேல்தரமான சகலவித சம்பாரங்களையும், சகலவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.

23ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும் அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

24இவர்கள் சகலவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த வஸ்திரங்கள் வைக்கப்பட்டு கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

25உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.

எசேக்கியேல் 27 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी