யோசுவா 19:9

சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

சூழலுடன் வாசிக்கவும் · யோசுவா 19

7மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

8இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

9சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

10மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.

11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.

யோசுவா 19 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी