யோவேல் 2:9

அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும்; பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.

சூழலுடன் வாசிக்கவும் · யோவேல் 2

7அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.

8ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.

9அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும்; பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.

10அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

11கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?

யோவேல் 2 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी