சகரியா 10:2

சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத் தரிசித்தார்கள்; சொரூபக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.

சூழலுடன் வாசிக்கவும் · சகரியா 10

1பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.

2சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத் தரிசித்தார்கள்; சொரூபக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.

3மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது, கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.

4அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள்.

சகரியா 10 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी