1 நாளாகமம் 9:19

கோராகின் குமாரனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவன் பிதாவின் வம்சத்தாராகிய அவனுடைய சகோதரருமான கோராகியர் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தார்கள்.

சூழலுடன் வாசிக்கவும் · 1 நாளாகமம் 9

17வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லூம்.

18லேவிபுத்திரரின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல்காத்துவந்தார்கள்

19கோராகின் குமாரனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவன் பிதாவின் வம்சத்தாராகிய அவனுடைய சகோதரருமான கோராகியர் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தார்கள்.

20எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.

21மெசெல்மியாவின் குமாரனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாயிருந்தான்.

1 நாளாகமம் 9 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी