காத்புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:
22இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங் கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
23அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.
24காத்புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:
25யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,
26எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பேமட்டும் பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்