எசேக்கியேல் 44:16

இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.

சூழலுடன் வாசிக்கவும் · எசேக்கியேல் 44

14ஆலயத்தின் சகல வேலைகளுக்கும் அதில் செய்யப்படவேண்டிய எல்லாவற்றிற்கும் நான் அவர்களை அதில் காவல்காக்கிறவர்களாயிருக்கக் கட்டளையிடுவேன்.

15இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

16இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.

17உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனைசெய்கையில் ஆட்டுமயிர் உடுப்பைத் தரிக்கலாகாது.

18அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.

எசேக்கியேல் 44 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी