அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.
24அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும் இயந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள்.
25உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.
26அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.
27இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய்.
28கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்