1 இராஜாக்கள் 6:22

இப்படி ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.

சூழலுடன் வாசிக்கவும் · 1 இராஜாக்கள் 6

20சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபது முழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

21ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன் தகட்டால் மூடினான்.

22இப்படி ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.

23சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.

24கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசி முனைதொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது.

1 இராஜாக்கள் 6 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी