எசேக்கியேல் 20:16

நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லாதேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்துவிடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன்.

சூழலுடன் வாசிக்கவும் · எசேக்கியேல் 20

14ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

15ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்,

16நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லாதேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்துவிடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன்.

17ஆகிலும் அவர்களை அழிக்காதபடிக்கு, என் கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்தரத்தில் நிர்மூலமாக்கவில்லை.

18வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.

எசேக்கியேல் 20 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी