அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:15

இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

சூழலுடன் வாசிக்கவும் · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8

13அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும்கண்டு பிரமித்தான்.

14சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

15இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

16அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

17அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 முழுவதையும் வாசிக்கவும்

இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்

KJV తెలుగు ಕನ್ನಡ हिन्दी